இயக்குனர் வெற்றிமாறன் உதயநிதிக்கு ஆதரவு!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

சனாதன கருத்துக்கள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கருத்துகள் தேசியளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பக்கம் நிற்பதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “சமத்துவம் நமது பிறப்புரிமை. அதில் எந்த கேள்வியும் இல்லை. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டியது அடிப்படை. அதற்கு தடையாக எது வந்தாலும் அது வீழ்த்தப்பட வேண்டும். இந்த உணர்வு உள்ள அனைவரும் உதயநிதி ஸ்டாலின் பக்கம் நிற்க வேண்டும். அவர் பேசியதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.