இரண்டாவது திருமணம் செய்யப் போகும் அஜித் பட நடிகை!

Filed under: சினிமா |

அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அவர் இயக்கும் படத்தின் நாயகியாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பூஜா பத்ரா.

பாலிவுட் சினிமாக்களில் நடிக்க வந்த புதிதிலேயே கவர்ச்சியில் கிறங்கடித்து பல ரசிகர்களை தன் வசம் சேர்த்தவர் பூஜா பத்ரா. தென்னிந்திய மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார், 90 காலகட்டங்களில் அதிக கவர்ச்சி காட்டும் நடிகையாக வலம் வந்ததால் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் உலக அழகி ரேஞ்சுக்கு புகழ் போதையில் சுற்றி வந்தார் பூஜா. சில வருடங்களுக்கு முன்பு சோனு என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு தான் இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது. தற்போது 43 வயதான பூஜா பத்ரா மீண்டும் ஒருவரை திருமணம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.