இரண்டு தோழிகளின் விபரீத முடிவு!

Filed under: இந்தியா |

இரண்டு தோழிகளின் அடுத்தடுத்து ஒரு மணி நேரத்திற்குள் தற்கொலை செய்து கொண்ட பரிதாப நிகழ்வு மகாராஷ்டி மாநிலத்தில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே என்ற பகுதியில் 17 வயதுள்ள இளம்பெண்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு இளம்பெண் ஆறு முப்பது மணிக்கு தற்கொலை செய்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது தோழி இரவு ஏழு முப்பது மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். இருவரும் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிறுவயதிலிருந்தே பழகிய தோழிகள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.