இரண்டு நாட்டு முதலமைச்சர்கள் சந்திப்பு!

Filed under: அரசியல் |

இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இருவரும் சந்தித்துள்ளனர்.

தென்மண்டல கவுன்சிலின் முப்பதாவது கூட்டம் கேரளாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றார். இக்கூட்டத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் தென் மண்டல கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து “திராவிடம்“ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.