இரும்பை தலையில் வைத்து சிகிச்சையளித்த மருத்துவர்!

Filed under: தமிழகம் |

லாரி டிரைவர் ஒருவருக்கு விபத்தில் சிக்கியபோது தலையில் தையல் போட்ட மருத்துவர் தலைக்குள் இரும்பு நட்டை வைத்து சிகிச்சையளித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே லாரி ஓட்டுனர் கார்த்திகேயன் என்பவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் தையல் போட்ட நிலையில் ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. இதையடுத்து உறவினர்கள் கார்த்திகேயனை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு நட்டு இருப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தையலை பிரித்து அந்த இரும்பு நட்டையை அகற்றி உள்ளனர். இது குறித்து கார்த்திகேயனின் உறவினர்கள் கூறும்போது மருத்துவரின் அலட்சியம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.