இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000, 200 யூனிட் இலவச மின்சாரம்!

Filed under: அரசியல்,இந்தியா |

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து சலுகை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது. தற்போது அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூபாய் 2000, வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3000 என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.