இளம்பெண்ணை கண்காணித்தவர் கைது!

Filed under: தமிழகம் |

கோவையை சேர்ந்த துப்பறியும் உரிமையாளர் இரண்டு பேர் இளம் பெண்ணை தொடர்ந்து கண்காணித்து பின் தொடர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது அப்பெண்ணின் கணவரே இளம் பெண்ணின் மீது சந்தேகப்பட்டு துப்பறிய செய்ததாக தெரியவந்துள்ளது.

துப்பறியும் நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தற்போது வளர்ந்து வருகிறது. திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது திருமணம் செய்ய போகும் பெண்ணை கண்காணிப்பது, திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளையை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை துப்பறியும் நிபுணர்கள் செய்து தருவார்கள். அந்த வகையில் கோவையை சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவியின் மீது சந்தேகம் கொண்டு துப்பறியும் நிறுவனத்தில் தொடர்பு கொண்ட நிலையில் துப்பறியும் நிறுவனத்தினர் இருவர் இளம்பெண்ணை தொடர்ந்து கண்காணித்ததாக தெரிகிறது. அந்த இளம் பெண் அறிந்து கொண்ட நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து துப்பறியும் நிபுணர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை செய்த போது இளம் பெண்ணின் கணவர் தான் அவரை சந்தேகித்து தங்களை அந்த பெண்ணை பின் தொடர செய்யச் சொன்னதாக கூறியதாக அம்பலமானது.