மலைபாம்பு ஒன்று இளம்பெண்ணை முழுமையாக விழுங்கியுள்ளது. அந்த மலை பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திடீரென காணாமல் போனதை எடுத்து அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு பெரிய வயிற்றுடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த மலைப்பாம்பை பிடித்து அதன் வயிற்றை கிழித்து பார்த்தபோது இளம்பெண்ணின் தலை மற்றும் உடல் தனி தனியாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த மலைப்பாம்பு சுமார் 16 அடி நீளம் கொண்டது என்று அப்பகுதி என்ன தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் அவ்வப்போது அந்த பகுதியில் நடப்பதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் அவ்வப்போது மலைப்பாம்புக்கு இரையாகி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டு இதேபோன்று மலைப்பாம்புவால் இருவர் இறந்திருக்கின்றனர்.