இளம்பெண் உயிரிழப்பு!

Filed under: தமிழகம் |

இளம்பெண் ஒருவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் அனுசியா என்பவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எட்டு நாட்களில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனுசியாவுக்கு குழந்தை பிறப்புக்கு பின்னர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் போலீசார் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அனுசியா குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்ட விசாரணைக்கு பிறகே தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.