இளம்பெண் உயிருடன் எரிப்பு!

Filed under: தமிழகம் |

மயிலாடுதுறையில் வரதட்சணைக்காக ஒரு இளம்பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன சுந்தரம் – உஷா ராணி தம்பதியரின் மகன் கார்த்திக் (29). இவருக்கும் மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் – ஜெகதாம்பாள் தம்பதியனரின் மகளான தர்ஷிகா (23) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். அவரது கணவருக்கு வேலை கிடைத்த விஷயமாக ரூ.4 லட்சம் கேட்டு தகராறு செய்திருக்கிறார். தர்ஷிகாவின் உடலில் வெந்நீர் கொட்டிவிட்டதாக அவரது பெற்றோருக்கு கார்த்திக்கின் வீட்டிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது தர்ஷிகாவின் உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தது. அங்குள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் கொண்டு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி கடந்த 23-ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், கணவர் கார்த்திக் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தர்ஷிகா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக அவரது குடும்பத்தினர் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியிடம் புகார் அளித்தனர். திருமணமாகி 5 மாதத்திற்குள் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.