தனக்கும் தனது கணவர் மாதவன் உயிருக்கும் 2 பேரால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
தீபா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 2 பேர் தங்களை பின் தொடர்ந்து வருவதாகவும், பெண் என்று கூட பாராமல் இரவு பகலாக தொலைபேசி மூலம் தொந்தரவு அளித்து வருவதாகவும், சில ரவுடிகளுடன் வீட்டுக்குள் நுழைய முயற்சிப்பதாகவும் தீபா கூறியுள்ளார்.
தனக்கு கால்கள் நடக்க முடியாத சூழ்நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதால், ஆடியோவை அடிப்படையாக கொண்டு 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் ஆணையரை ஜெ.தீபா கேட்டு கொண்டுள்ளார்.
Related posts:
#BREAKING: மதுரையில் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு முதலமைச்சர் உத்தரவு!
250 கால்நடை உதவி மருத்துவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி...?
தொற்று ஏற்பட்டவர்களில் 40% பேருக்கு அறிகுறியே காணப்படவில்லை....எய்ம்ஸ் தகவல்
எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசிய சசிகலா மருமகன்..? அதிமுகவில் பரபரப்பு.. !


