இளம் நடிகரின் படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

தெலுங்கு திரைப்பட நடிகரின் திரைப்படம் விஜய்யின் லியோ படத்தோடு மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கின் பிரபல நடிகரான ராம் பொத்தினேனி வாரியர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தாலும், பெரியளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் போயபட்டி சீனு இயக்கத்தில் நடித்து வரும் ஆக்‌ஷன் திரைப்படம் அக்டோபர் 20ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு நாள் முன்புதான் விஜய்யின் “லியோ” திரைப்படம் ரிலீசாக உள்ளது.