ஈபிஎஸ் கனவு காண வேண்டாம்!

Filed under: அரசியல் |

இனிமேல் எடப்பாடி பழனிசாமி கனவு காண வேண்டாம். ஏனென்றால் தமிழ்நாடு இனி திமுகவின் கோட்டை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

இதுபற்றி அவர், “அதிமுகவில் உள்ள தெருச் சண்டையை மறந்து திமுக மீது எடப்பாடி பழனிசாமி பாய்கிறார். சொந்த மாவட்டமான சேலத்துக்கு சென்றுவிட்டு சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் சட்டமன்றத்தில் அந்த மாவட்டத்தில் வென்றது போல் மற்ற மாவட்டத்தில் வென்று இருந்தால் அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுக மண்ணை கவ்வியது என்பதை அவர் மறந்துவிட்டார். திமுக சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் கோட்டையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி இனி கோட்டை கனவு காண வேண்டாம்” அவர் கூறினார்.