ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரொனா!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருமகன் ஈவேரா மறைவையொட்டி, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன். கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமமாக இவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது. இதுகுறித்து, மருத்துமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லேசான கொரொனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது உடல் நிலை தேறி வருகிறார்’’ என்று தெரிவித்துள்ளது.