உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவுக்கு அறிவுறுத்தல்!

Filed under: இந்தியா |

உச்சநீதிமன்றம் நுபுர் சர்மா தான் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு பொறுப்பு என்று அறிவித்துள்ளது.

இன்று உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்து குறித்த வழக்கை விசாரித்தது.
பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக நாடு முழுவதும் வெவ்வேறு நீதிமன்றங்களிலும் பல தரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வழக்குகளை மொத்தமாக டில்லி நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நுபுர் சர்மா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் “நுபுர் சர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மா பேச்சால்தான். ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் என்றால் நீங்கள் எதுவேண்டுமானாலும் பேசுவதற்கு லைசென்ஸ் கிடையாது. நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு. டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.