உடல் எடையைக் குறைக்கும் சூர்யா!

Filed under: சினிமா |

“கங்குவா” திரைப்படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

கடந்த மாதம் படத்தின் டைட்டில் புரமோஷன் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. படத்தின் புரமோஷன் வீடியோவில் “புறநானூறு” என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். டிசம்பர் நான்காவது வாரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதைக்களம் 1965ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த படத்தின் ஒரு பகுதியில் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்துக்கு மாற உள்ளாராம்.