உணவகத்தில் அதிகாரிகள் அதிரடி!

Filed under: தமிழகம் |

அதிகாரிகள் சென்னை அருகே தாம்பரத்திலுள்ள குவாலிட்டி என்ற உணவகத்தில் ஆய்வு செய்தனர்.

குவாலிட்டி என்ற பெயர் வைத்துக் கொண்ட உணவகத்தில் குவாலிட்டி இல்லாத சிக்கன்கள் வைத்திருந்ததை ஆய்வு செய்த அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தாம்பரம் கேம்ப்ரோடு என்ற பகுதியில் குவாலிட்டி என்ற உணவகம் பல வருடமாக இயங்கி வருகிறது. இவ்வுணவகத்தில் கெட்டுப்போன உணவுகள் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி 5 கிலோ அரிசி மற்றும் நூடுல்ஸ் அந்த உணவகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 2000 ரூபாய் அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறினர்.