உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி!

Filed under: அரசியல்,இந்தியா |

சமூக வலைதளங்களில் பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறும் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக பீகார் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார். குருத்வாராவில் வழிபாடு நடத்திய அவர் அங்குள்ள உணவுக் கூடத்தில் சில உணவுகளை சமைத்தார். அதன்பின் அங்கிருந்த சீக்கியர்களுக்கு பிரதமர் மோடி உணவு பரிமாறினார். பிரதமர் மோடி தனது கைகளால் உணவு பரிமாறியது சீக்கியர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.