உயர்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

உயர் கல்வித்துறை தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த சில மாதங்களாக விண்ணப்பம் பெறப்பட்டது. அதன் பின் கல்லூரி தொடங்கி தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப வரும் 21ம் தேதி நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை மாணவர்கள் http://tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை கல்லூரிகளில் சேராத மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் சென்று எந்தெந்த கல்லூரிகளில் காலியிடங்கள் இருக்கிறது என்பதை அறிந்து அவற்றில் சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.