உயிரிழந்த கபடி வீரருக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில், “குளித்தலை வட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூர் பகுதியில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்ட மாணிக்கம் என்ற 26 வயது நபர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவு கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த கபடி விளையாட்டு வீரரின் குடும்பத்தினருக்கு தனது எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு ரூபாய் 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.