உலகநாயகனின் அடுத்த படப்பிடிப்பு எப்போது?

Filed under: சினிமா |

“விக்ரம்” திரைப்படம் வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது. மக்கள் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கமலஹாசன் நடித்து பாதியில் படப்பிடிப்பு நின்று போன திரைப்படங்களை எல்லாம் தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர் திரைத்துறையினர்.

இதன் முதல் கட்டமாக “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கடந்த ஆறு வருடங்களாக முன் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பின் கிடப்பில் போடப்பட்ட “சபாஷ் நாயுடு” படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் அடுத்தடுத்து நடந்த ஒரு சில சம்பவங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர முடியாமல் போனது.