உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் புகழாரம்!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரூராட்சி நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் “நாங்கள் தீட்டும் திட்டங்கள் அனைத்திற்கும் நீங்கள் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் காரணமாக உள்ளனர் என பேரூராட்சி நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பேரூராட்சி நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியபோது, “கோட்டையில் நாங்கள் திட்டங்களை தீட்டீனாலும், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நீங்கள் தான் எந்த புகாரும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். அரசியல் சட்டத்திருத்தப்படி 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.