எங்கே அழைத்து சென்றனர் அமலாக்கத்துறை?

Filed under: அரசியல்,தமிழகம் |

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரை அழைத்துச் சென்றதாகவும், அவர்களை எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய ராணுவத்தின் துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்கு இருக்கின்றனர். இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவல் சார் உதவியாளர் விஜயகுமாரை அமலாகத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அவர் எந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்? எந்த இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது? என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அரசு சார்பில் உதவியாளராக நியமிக்கப்பட்டவர் விஜயகுமார்.