எச்.ராஜா கைது?

Filed under: தமிழகம் |

ஹெச் ராஜா கைது செய்யப்பட்டதாக தகல்வகள் வெளியாகி உள்ளன.

இன்று பழனியில் நடைபெற இருந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தார் பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா. இந்நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் அரசியல் தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரக்கூடாது என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதை மீறி எச். ராஜா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்ததாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் தன்னை கைது செய்தது ஏன் என்பது குறித்து எந்த காரணத்தையும் போலீசார் தன்னிடம் தெரிவிக்கவில்லை என எச். ராஜா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.