அதிமுக ஒற்றைத் தலை குறித்து கட்சிக்குள்ளே நிலவி வரும் களேபரத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி உள்ளது. ஆனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது. எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேரில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து பேசுவதற்காக அண்ணாமலை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.