அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை முதல் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்- நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. நாளை தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், முகாமுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்“ என்று கூறினார்.
Related posts:
சென்னை விமான நிலையத்தில் 1.38 கிலோ தங்கம் மற்றும் எல்க்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல்!
என்னது நான் சங்கியா...? கமல் ஆவேசம்
தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற, விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைத...
தர்காவாக மாறிய ராணிமங்கம்மாள் சத்திரம்! அ.தி.மு.க.வினர் ஆக்ரமிப்பில் வேடசந்தூர் கோட்டை விநாயகர்கோவில...



