எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்கான பிரச்னை உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியிருப்பதாக ஈபிஎஸ் தனது மனுவில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஈபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை கோரியிருப்பதாக ஈபிஎஸ் தமது மனுவில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை கொண்டு வருமாறு வலியுறுத்திவருகின்றனர். ஓ.பி.எஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிவருகிறார்’’ எனக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.