எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவு!

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும் போதையின் பாதைக்கு செல்லவிடாமல், நல்வழிப்படுத்துவது நம் கடமையென கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதுகுறித்து, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “நாட்டில் பெருவாரியான குற்றச் சம்பவங்களுக்கும், நம் சமூக சீர்குலைவுக்கும் காரணமான கொடிய போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் அகற்றி, நம்மையும், நம் குடும்பத்தையும் வளத்துடன் பாதுகாத்து, போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம்; வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும் போதையின் பாதைக்கு செல்லவிடாமல், நல்வழிப்படுத்துவது நம் கடமையென கொள்வோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.