எதிர்க்சிகள் ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு; மாயாவதி அறிவிப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜகவை கடுமையாக எதிர்த்த சிரோமணி அகாலி தளம், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது நிலைப்பாட்டை இப்போது வரை தெரிவிக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி, சிரோமணி அகாலிதளம், பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை இதுவரை வரை தெரிவிக்கவில்லை! இதுவரை ராகுல் காந்தி, மாயாவதி, மு.க.ஸ்டாலின் மற்றும் நிதிஷ் குமார் ஆகிய முக்கிய தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.