என்னை நானே திருமணம் செய்வேன்!

Filed under: இந்தியா |

குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். இச்செய்தி பெரும் வைரலாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் பலரது தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் வலுத்துள்ளது.

ஷாமா பிந்து என்பவர் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர். சோசியாலஜியில் பட்டப்பட்டிப்பு முடித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சிறுவயது முதலே திருமணத்தின் மீது ஆர்வமில்லாமல் இருந்து வந்த ஷாமாவுக்கு மணமகளை போல அலங்காரம் செய்வதும் பிடித்துள்ளது. இதனால் தன்னை தானே திருமணம் செய்து கொள்ள எடுத்த முடிவை தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.
இதற்கு அவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில் ஜூன் 9ம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும், ஜூன் 11ம் தேதி திருமணமும் நடைபெற போவதாக அறிவித்துள்ளார் ஷாமா. இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறுகின்றனர். அதே சமயம் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பாஜக முன்னாள் துணை மேயர் சுனிதா சுக்லா “இதுபோன்ற திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். அவர் தன்னையே திருமணம் செய்து கொள்ள எந்த கோவிலிலும் அனுமதிக்கப்பட மாட்டார்” என கூறியுள்ளார்.