எலக்ட்ரிக் வாகனங்களில் தீப்பிடிப்பதை கண்டறிய குழு!

Filed under: இந்தியா |

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எலக்ட்ரிக் வாகனங்களில் அடிக்கடி தீப்பிடிப்பதற்கான காரணத்தை அறியும் குழு ஒன்றை அமைக்க போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த உண்மை நிலையை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு பணியில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவ்வாறு காட்டப்பட்டது தெரியவந்தால் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
குறைபாடு உள்ள எலக்ட்ரிக் வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை நிறுவனங்கள் தொடங்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.