எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

Filed under: உலகம் |

எலான் மஸ்க் டுவிட்டரில் லைக் பதிவின் போது கலர் மாறுகிறதா என்று பதிவிட்டுள்ளார்.

44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டரை வாங்க தொழிலதிபர் எலான் மஸ்க் சம்மதித்தார். இதையடுத்து அவர் டிவிட்டரை வாங்கினால் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது. டிவிட்டரில் 20 முதல்- 50 சதவீதம் வரையிலான போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த போலி கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் டிவிட்டரின் சிஇஓ பராக் அகர்வால், 5 சதவீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதனால் முன்னர் இருவருக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதோடு சிஇஓ பராக் அகர்வாலை அவமதிக்கும் வகையிலும் எலான் மஸ்க் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.