அடுத்த ஒரே வாரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு கோடியை எட்டும் – WHO தகவல்!

Filed under: உலகம் |

அடுத்த ஒரே வாரத்தில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்ட நேரிடும் என உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் ஆதானம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மற்றும் குணப்படுத்தும் சிகிச்சை முறைகளின் ஆய்வுகள் தொடர்ந்து நடந்தாலும், தற்போது இருப்பதை வைத்து பரவலை தடுத்து, மனிதர்களின் உயிர்களை காக்க வேண்டும் என கூறியுள்ளார்

மேலும், இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை 95 லட்சத்தை தாண்டியுள்ளது மற்றும் 4 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.