எல்.ஐ.சி.யின் சந்தை மூலதனம் சரிவு!

Filed under: இந்தியா |

ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக எல்ஐசியின் சந்தை மூலதன மதிப்பு சரிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் என்றால் நம்பி வாங்கி இருந்த காலம் போய் தற்போது எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ள நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. சற்று முன் வெளியான தகவலின்படி எல்ஐசி சந்தை மூலதன மதிப்பு ரூபாய் 4 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்த எல்ஐசி நிறுவனம் தற்போது 14வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் மூலதன மதிப்பு 4 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளதால் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.