எஸ்.கே.சூர்யா படத்தின் முதல் சிங்கிள்!

Filed under: சினிமா |

“பொம்மை” திரைப்படத்தின் முதல் சிங்கள் ரிலீசாகி உள்ளது.

“மான்ஸ்டர்” திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் “பொம்மை” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படம் முடிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளான நிலையில் இன்னும் ரிலீசாகவில்லை. இப்போது “பொம்மை” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘முதல் முத்தம்’ என்ற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.