ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை!

Filed under: தமிழகம் |

ஏப்ரல் 18ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்கள் நடைபெறும் போது மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம்.

ஏப்ரல் 18ம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி அம்மாவட்டத்தில் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும். இத்திருவிழாவை காண்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த திருவிழாவை ஒட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.