ஏ.ஆர்.முருகதாஸ் – பி.மதன் மான்கராத்தே சண்டை!

Filed under: சினிமா,தமிழகம் |

ar-murugadoss-postpones-the-release‘மான் கராத்தே’ படத்தை ஏ.ஆர்.முருகதாசும் பி.மதனும் இணைந்து தயாரித்தனர். படமும் சுமாராகப்போனது. படத்தின் லாபத்தைப் பங்கு போடுவதில் இருவருக்கிடையே பெரும் மோதல். முருகதாஸ் உதவியாளர் படத்தின் இயக்குநர் திருக்குமரன். இவர் சொன்னதைவிட 3 கோடி ரூபாய் அதிகமாய் செலவிட்டதால் அதை முருகதாஸ் தரவேண்டும் என்கிறார் பி.மதன். இதனாலே இருவருக்கிடையே மோதல் வெடித்தது. இதனால் நடந்த சமரசம் தோல்வியில் முடிந்ததால் விவகாரம் நீதிமன்றத்துக்கு போவதாய்த்தெரிகிறது. படத்தின் காட்சிகள் பற்றியும் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.