இளம் இயக்குனர் அட்லீயை பாராட்டினார் முருகதாஸ் !!!

Filed under: சினிமா |
imageபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன்  இயக்குனர் முருகதாஸ் இணைந்து  தயாரிக்கும் ‘ராஜா ராணி ‘ திரைப்படத்தின்  trailer ஐ  பார்த்த பிறகு முருகதாஸ் இயக்குனர் அட்லீயை பாராட்டிய வண்ணம் உள்ளார்.
‘ நான்  வெள்ளோட்டம்  வெளியிடப்படும்  நாளுக்காக காத்து  கொண்டு இருக்கிறேன் .நான் பல முறை பார்த்து  விட்டாலும் ரசிகர்களின் அபிப்ராயத்தை அறிந்துக் கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். சொன்னக் கதையை அப்படியே படமாக்குவதும் , அதை முறையாக ரசிகர்களை குழப்பும் செய்யாமல் trailer  உருவாக்குவதும் ஒரு நல்ல இயக்குனரின் அடையாளம் . அந்த முறையில் அட்லீயின்  திறமை தெளிவாக தெரிகிறது.இவரை அறிமுகபடுதுவதிலும் இந்த படத்தை தயாரிப்பதிலும் எனக்கு ரொம்ப பெருமை என்கிறார் முருகதாஸ் .
ராஜா ராணி திரைப்படத்தின் trailer வெளியீட்டு விழா வருகிற 18ஆம் தேதி விமரிசையாக நடக்க உள்ளது .செப்டம்பர் இறுதியில் வெளி வர உள்ள ராஜா ராணி படத்துக்காக பல்வேறு பிரம்மாண்டமான விளம்பர யுத்திகள்  கையாள படுகிறது .

 

SHOOTING SPOT