ஐடி சோதனை மீண்டும் தொடங்கியது!

Filed under: அரசியல்,தமிழகம் |

தற்போது மீண்டும் கரூரில் ருமானவரித்துறை சோதனை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று காலை முதல் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை கோவை கரூர் ஆகிய பகுதிகளில் இச்சோதனை நடைபெற்று வரும் வகையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை நடந்த போது திமுக தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வருமானவரி சோதனைக்கு வந்த அதிகாரி ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரி இது துறை அதிகாரிகள் சோதனையை நிறுத்திவிட்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். மேலும் திமுக தொண்டர்கள் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டது. நிறுத்தப்பட்ட வருமானவரி சோதனை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 3 வாகனங்களில் காவலர்கள் பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.