ஐந்து மொழிகளில் டப்பிங் பேசிய பிருத்விராஜ்!

Filed under: சினிமா |

“கேஜிஎப்” திரைப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிக்கும் “சலார்” திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி “சலார்” ரிலீசாகவுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் கடந்த டிசம்பர் 1ம் தேதி ரிலீசானது. 5 மொழிகளில் வெளியான இந்த டிரெயிலர் மொத்தம் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இரண்டு நண்பர்கள் எப்படி எதிரிகள் ஆனார்கள் என்பதை சொல்லும் கதைக்களமாக முதல் பாகம் இருக்கும் என இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தில் வரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிருத்விராஜ் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரது கதாபாத்திரத்துக்கு அவரே டப்பிங் பேசியுள்ளதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.