ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் தீபக் சஹார்!

Filed under: விளையாட்டு |

ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகி இருந்த தீபக் சஹார் முழுவதுமாக விலகி உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் இல்லாததை அடுத்து அந்த அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

குறிப்பாக தீபக் சஹார் அணியில் இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்து வந்த நிலையில், காயமடைந்த தீபக் சஹர் இன்னும் ஒரு போட்டிகளுக்கு பின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அவரது காலில் காயம் பட்டது மட்டுமன்றி முதுகிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.