இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் அட்டவணை நாளை வெளியீடு!

Filed under: விளையாட்டு |

இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியின் அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா அவரின் சொந்த காரணமாக விலகினார்.

இந்நிலையில், இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் கால அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் விதியின்படி கடந்தாண்டு சாம்பியனும், இரண்டாம் இடம் பிடித்த அணியும் வரும் 19-ம் தேதி நடக்க உள்ள முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், கொரோனா காரணத்தினால் முதல் போட்டியில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது.