ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் அறிவிப்பு!

Filed under: உலகம் |

துருக்கி அதிபர் ஏரோடகன் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹுசைன் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

இன்று துருக்கியில் செய்தியாளர்களை சந்தித்து அதிபர் ஏரோடகன் நீண்ட காலமாக உளவுத்துறையினர் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹுசைனை கண்காணித்து வந்ததாகவும் நேற்று நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். தீவிரவாத இயக்கங்கள் மீது பாரபட்ச முறையில் தொடர்ந்து தாக்குதல் தொடரும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார். துருக்கியில் இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமானோர் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.