ஒடிசாவில் குவிந்த மக்கள் வெள்ளம்!

Filed under: இந்தியா |

இன்று பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் பூரி ஜெகந்நாதர் கோவிலில் நடைபெறும் ரத யாத்திரையை காண ஒடிசாவில் குவிந்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு முறை ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள ஜெகந்நாதர் கோவிலில் நடைபெறும் ரதயாத்திரையை காண பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் வருவது வழக்கம். இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரதயாத்திரை தொடங்குகிறது. இந்நிலையில் மக்கள் பலரும் பூரியில் குவிந்துள்ளனர். தேரை வடம்பிடித்து இழுக்க மக்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொள்ளும் நிலையில் இடையூறுகள் இல்லாமல் தேரோட்டத்தை நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.