பூரி ஜெகநாதர் கோவிலில் வேலை பார்க்கும் 400 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

Filed under: இந்தியா |

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் வேலை பார்க்கும் 400 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், கோவிலை தற்போது திறக்க வாய்ப்பில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை பற்றி அம்மாநிலத்திலுள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒடிசா அரசு, பூரி ஜெகநாதர் கோவிலின் கருவறையில் அதிகமாக இடவசதி இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், கோவிலை இருந்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த கோவிலில் 351 ஊழியர்களுக்கும் மற்றும் 51 அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.