ஒரு ஷோ ஓடினாலே வெற்றிவிழாதான்; சுந்தர் சி!

Filed under: சினிமா |

தலைநகரம் திரைப்படம் 2006ம் ஆண்டு சுந்தர் சி நடிகராக அறிமுகமானது. இதையடுத்து 17 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டே நடந்து முடிந்தது. இப்போது படத்தின் டிரெயிலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக டிரெயிலரைப் பார்க்கும் போது தெரிகிறது. படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில், பேசிய சுந்தர் சி “இயக்குனர் துரையோடு நான் இணைந்து பணியாற்றிய இருட்டு திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அந்த படத்தின் வெற்றியை நாங்கள் கொண்டாவே இல்லை. ஆனால் இப்பொழுது கொண்டாடி இருக்க வேண்டும் என தோன்றுகிறது. இப்போதெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு ஷோ ஒடிவிட்டாலே சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடப்படுகிறது. எனக்கு “அரண்மனை” போலவே “தலைநகரம்“ படமும் பல பார்ட்களாக வரும் என நினைக்கிறேன்” என கூறினார்.