ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு!

Filed under: சென்னை |

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் முக்கிய சாலைகளான சென்னை ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் ஆகிய 2 சாலைகளையும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து இணைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக ஓஎம்ஆர் ஈசிஆர் சாலைகளை நீலாங்கரையில் இணைக்கும் பணி ரூபாய் 18 கோடியில் முடிக்கப்பட்டு இருப்பதாகவும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் & இசிஆர் சாலையை இணைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மூலம் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே மேம்பாலம் அமைக்க விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இந்த மேம்பாலம் தயாரானால் இரு சாலைகளும் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.