ஓபிஎஸ்-ன் ஆதரவாளரின் பரபரப்பு பேச்சு!

Filed under: அரசியல்,தமிழகம் |

ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் புகழேந்தி ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக வேட்பாளராக தென்னரசு ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவிருப்பதால் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடும் சவால் கொடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு பெற்ற தென்னரசு வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி உட்பட அனைத்தையும் ஓபிஎஸ்ஸிடம் ஈபிஎஸ் ஒப்படைக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். ரூ.40000 கோடி ஊழல், தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக ஈரோட்டில் பிரச்சாரம் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.