ஓபிஎஸ் தன்னிடம் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் அவருக்காக கையெழுத்து போடுவேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஓபிஎஸ் தனியாக வேட்பாளரை நிறுத்தி இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்திடுவேன் என்றும் இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் தமிழக மக்களும் அதிமுக ஒன்று பட வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.