ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்கு!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சில தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெற்றனர். கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் என்பவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக IPC 1860 உட்பிரிவு 171நி-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாக, தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.